ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

பாதாம் குக்கீஸ்





என் முதல் சாக்லேட் குக்கீஸ்  செய்முறை பதிவை தொடர்ந்து மற்றும் ஒரு   குக்கீஸ்.

இது ஒரு சாதாரண குக்கீ,  ஆனால் பக்கங்களில் நறுக்கப்பட்ட / பொடியாக்கிய பாதாம் பருப்பு இருப்பதால் பாதாம் குக்கீஸ்.

தேவையான பொருட்கள் :  150 கிராம் வெண்ணெய்  ;  1/3 கப் சர்க்கரை   ; ¼ கப் பாதாம்  பருப்பு (1tsp சர்க்கரையுடன் பொடியாகியது)  ; ½ கோதுமை மாவு கப்   ;   ½  கப் மைதா மாவு  ;  ½   கப் சோள மாவு  ; ¼ கப் வெண்ணிலா கஸ்டட் தூள்   ;    1 – முட்டை (வெள்ளை கரு)   ;  உப்பு (ஒரு சிட்டிகை)

செயல் முறை :  அனைத்து உலர் மூலப்பொருட்களையும் (கோதுமை, மைதா, சோள மாவு,  கஸ்டட் தூள், மற்றும் உப்பு) நன்றாக கலக்கிகொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில், சர்க்கரை மற்றும் வெண்ணெய் சேர்த்து நன்றாக (வெளிர் நிறம் வரை) கலக்கிகொண்டு 2 tbsp உலர் மாவு கலவையை சேர்த்து கலக்கவும். இப்படியே அனைத்து மாவையும் சேர்த்து நன்கு கலக்கிகொள்ளவும்.

மாவை உறையில் சுற்றி சுமார் 30 நிமிடம் நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.

பின்னர் மாவை சுமார் 8 அங்குல நீள (பாம்பு போன்ற) வடிவில் உருட்டி, அதன் மீது முட்டையின் வெள்ளை கருவை (ப்ரஷ்) புசி, தூள் செய்த பாதாம் பொடியில் பிரட்டி எடுக்கவும்.

(முட்டைக்கு மாற்றாக பால் பயன்படுத்தலாம்)

மீண்டும் மாவை உறையில் சுற்றி சுமார் 90 நிமிடம் நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.

பின்னர் மாவை, சுமார் 2 செ.மீ அகலத்திற்கு வெட்டி பேக்கிங் தட்டில் (பேக்கிங் தாள் இட்டு) பரப்பி சுமார் 180 ° C preheated  (அடுப்பில்) பேக் செய்யவும்.
  
சூடாறியபின் காற்றுபுகா கலனில் அடைத்து வைக்கவும்.

2 கருத்துகள்: