வெள்ளி, 4 ஏப்ரல், 2014

சாக்லேட் ஃபட்ஜ்




ஃபட்ஜ் என்பது பர்ஃபி போன்ற ஆனால் மிருதுவான இனிப்பு வகை. சாக்லேட் எனக்கு பிடித்த ஒன்று. அதிலும் டார்க் சாக்லேட் (கோக்கோ 60% மேல் உள்ள) மிக மிக பிடிக்கும். காரணம், அதன் கடிம தன்மையும் கசப்பும்-இனிப்பும் கலந்த சுவை.

சாக்லேட் ஃபட்ஜ், மிகவும் எளிமையாக செய்யும் இனிப்பு வகை. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

தேவையான பொருட்கள்  - 300 கிராம் டார்க் சாக்லேட் (கோக்கோ 70% அல்லது அதற்கு மேல் உள்ள)  ;  150 கிராம் மில்க் சாக்லேட்   ;   395 கிராம் கண்டன்ஸ்ட் மில்க்  ;  25 கிராம் வெண்ணை   ;   1/4 கப் அக்ரூட் பருப்பு

செயல் முறை  : சாக்லேட்களை சிறு துண்டுகளாக வெட்டிகொண்டு கண்டன்ஸ்ட் மில்க் மற்றும் வெண்ணை சேர்த்து, (அடி பக்கம்) கனமான பாத்திரத்தில் இட்டு குறைந்த தீயில் வைத்து (சாக்லேட்டை) உருக்கவும். பின்னர், சிறு துண்டுகளாக அக்ரூட் பருப்பு சேர்த்து கலக்கவும்.

மேலே செய்த கலவையை ஒரு தட்டில் உற்றி மேல்புறத்தை சமமாக்கவும். பின் குளிர்சாதனபெட்டியில் சிறிது நேரம் வைத்து தேவையான வடிவத்தில் வெட்டிகொள்ளவும்.

சாக்லேட் ஃபட்ஜ் மற்றும் ஸ்டாங் காபியுடன் சேர்த்து சாப்பிட எனக்கு மிகவும் பிடிக்கும். உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக