ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

மிருதுவான (Fudgy) பிரவுனீஸ்




முந்தய இரண்டு பதிவுகளில் தொடர்சியாக ரொட்டி செய்தமையால், இப்பொழது ஒரு இனிப்பு வகை, பிரவுனீஸ். 

பிரவுனீஸ் என்பது கேக்குக்கும், குக்கீஸ்க்கும் இடைபட்ட ஒன்று. அதாவது,  கேக் போன்று மிக மிருதுவாக இல்லாமலும் அதே சமயம் குக்கீஸ் போன்று கடினமாகவும் இல்லாமல் இருக்கும். 

பிரவுனீஸ் பொதுவாக, சாக்லேட், உலர் பழங்கள் மற்றும் உலர் பழங்கள் ( பருப்பு) கொண்டு செய்யபடுகிறது. 

பிரவுனீ செய்ய அதிக சதவிதம் கோக்கோ (<60%) உள்ள சாக்லேட் (டார்க் சாக்லேட்) பயன்படுத்த விரும்புகிறேன். காரணம் அதன் கசப்பும் இனிப்பும் சேர்ந்த சுவை எனக்கு மிகவும். ஆனால் மிதமான இனிப்பு சாக்லேட்  (semisweet) டும் பயன்படுத்தலாம். (உங்கள் விருப்பத்திகேற்ப) .

தேவையான பொருட்கள் :  100 கிராம் வெண்ணெய் (துண்டுகளாக வெட்டியது)   ; 1 கோப்பை (125 கிராம்) மைதா மாவு  ; ¼ (30 கிராம்) கப் (unsweetened)  கொக்கோ தூள் ; ½ தேக்கரண்டி பேக்கிங் பவுடர் ; ½ தேக்கரண்டி உப்பு ; 225 கிராம் மிதமான இனிப்பு (Semisweet) அல்லது டார்க் சாக்லேட் சாக்லேட் ( நறுக்கியது) ; 1¼ (250 கிராம்) கப் சர்க்கரை ; 3 பெரிய முட்டைகள்; ½ கோப்பை உலர் பருப்புகள் (உடைத்த)

செயல்முறை:   ஒரு கிண்ணத்தில், மாவு, கொக்கோ, பேக்கிங் பவுடர் , உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.

சாக்லேட் மற்றும் வெண்ணெயை உருக்கிகொள்ளவும் ( இரட்டை கொதிகலன் முறையில் அல்லது மைக்ரோவேவ் மூலமாக) சிறிது சிறிதாக சர்க்கரை சேர்த்து கலந்து. பின்னர், முட்டை சேர்த்து  நன்றாக கலக்கவும்.
பின், முதலில் கலந்துவைத்துள்ள மாவு கலவையை சேர்த்து கலக்கவும். (கலவை ஈரப்பதமாக இருக்கவேண்டும்)

இதற்கிடையில், ஒரு பேக்கிங் தட்டில் பேக்கிங் காகிதம் பரப்பவும். ( காகிதத்தின் பரப்பளவு பேக்கிங் தட்டின் பரப்பளவை விட அதிகமாக இருந்தால், பின்னர்  தட்டில் இருந்து எடுக்க எளிதாக இருக்கும்.

தயாராக பேக்கிங் தட்டில், மாவின் கலவையை ஒரே சிராக பரப்பி சுமார் 180° c வெப்பநிலையில் சுமார் 30 முதல் 40 நிமிடங்கள் வரை (preheated)  அவனில் (oven) பேக் செய்யவும். (பல்குச்சியில் மாவு ஒட்டாமல் வரும் பதம் வரை)

வெப்பம் குறைந்த பின், சிறிய துண்டுகளாக தேவையான வடிவத்தில் வெட்டி காற்று புக முடியாத கலனில், இரண்டு நாட்கள் வரை நன்றாக இருக்கும்.

வெண்ணிலா ஐஸ் கிரீம் சேர்த்து பிரவுனீஸ் சாப்பிட எனக்கு மிகவும் பிடிக்கும். அனால் என் கணவருக்கு காபியுடன் சாப்பிட பிடிக்கும். உங்களுக்கு....?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக