வியாழன், 10 ஏப்ரல், 2014

புல்ல-பார்ட் (Pull Apart Bread) ரொட்டி



நான் இன்று உங்களுக்கு ஒரு புதிய வகை ரொட்டி செய்து காண்பிக்க விரும்புகிறேன். அதன் பெயர் புல்ல-பார்ட் ரொட்டி. (Pull Apart Bread)
புல்ல பார்ட் ரொட்டி எனப்படுவது, தனித்தனியாக பிய்க்க ஏதுவாக செய்யபடும்  ரொட்டி. எனவே ரொட்டி பேக் செய்த பின் துண்டாக்க வேண்டிய அவசியமில்லை.

மேலும், புல்ல-பார்ட் ரொட்டியில் நமக்கு தேவையானவற்றை (சமோசா அல்லது பஃப் போன்று) வைத்து செய்யலாம். நான் செஷ்வான் (Schezwan) பேஸ்ட் (ஒரு வகை சீன் உணவு) மற்றும்  காய்கறிகள் வைத்து, காரசாரமக செய்திருக்கிறேன். உங்களுக்கு காய்கறிகள் வேண்டாம் என்றால், சீஸ், மூலிகைகள், பழங்கள், சாக்லேட், மாமிசம் போன்றவைகளை சேர்கலாம்.

புல்ல-பார்ட் ரொட்டியின் செயல்முறையினை இரண்டு பகுதியாக பிரித்து கொள்வோம். ஒன்று ரொட்டி மாவு தாயாரிப்பு மற்றும் அதனுல் வைக்கும் திணிப்பு (stuffing or filling)

ரொட்டி செய்தேவையான பொருட்கள் :   1/2 கப் சூடான பால்  ;  1 தேக்கரண்டி சர்க்கரை   ;   2 தேக்கரண்டி உலர் ஈஸ்ட்  ;  2 3/4 முதல் 3 கப் மைதா மாவு   ;  1 தேக்கரண்டி உப்பு  ;   25 கிராம் வெண்ணெய் (அறை வெப்பநிலையில்)    ;    1 தேக்கரண்டி உப்பு  ;  3/4 கப் பால் (அறை வெப்பநிலையில்)  ;  1 தேக்கரண்டி பூண்டு விழுது.

திணிப்பு செய் தேவையான பொருட்கள் : 15 20 கிராம் உருகிய வெண்ணெய் (தடவுவதற்கு)  ;    1 பெரிய வெங்காயம், 1 குடை மிளகாய்,  1 கேரட் (அனைத்தும் மெல்லியதாக, நிளமாநறுக்கியது)  ;  செஷ்வான்  பேஸ்ட் 1 தேக்கரண்டி  ;  2 தேக்கரண்டி தக்காளி சாஸ்  ; 1 தேக்கரண்டி எண்ணெய் ;  உப்பு (தேவையான அளவு)

முதலில் ரொட்டியில் வைக்கும் திணிப்பு செய்வோம். எண்ணை சட்டி (அ) கடாயில், 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு வெங்காயத்தை நன்கு வதக்கவும். பின் கேரட், குடை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் செஷ்வான்  பேஸ்ட், தக்காளி சாஸ், உப்பு சேர்த்து  சிறிது நேரம்  வதக்கி தனியாக வைக்கவும்.

ரொட்டி மாவு தயாரிக்கும் முறை : சூடான பாலில் 1/2 கப் சர்க்கரை மற்றும் ஈஸ்ட் கலந்து சுமார் 5 நிமிடங்கள் வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில், உப்பு, வெண்ணெய், பூண்டு விழுது சேர்த்து நன்றாக கலக்கவும். பின் ஈஸ்ட் கலவையை சேர்த்து நன்றாக கலக்கவும். பின் , 3/4 கப் பால் மற்றும் 2 கப் மைதா மாவு சேர்த்து நன்கு பிசையவும். மாவு மென்மையாகவும், மிருதுவாகவும், ஒட்டாமலும் வரும் வரை பிசையவும். (தேவைபட்டால் சிறிய கூடுதல் மாவு சேர்த்துக்கொள்ளவும்.)

பின்னர், மாவை ஒரு பந்து போல் செய்து, அதன் மேல் எண்ணெய் தடவி, ஒரு பாத்திரத்தில் வைத்து ஈரமான துணியால் மூடி, சுமார் 60 முதல் 90 நிமிடம் வரை (அ) மாவு கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அளவு உயரும் வரை வைக்கவும்.

பின், மாவை பிசைந்து 12 சிறிய பந்துகளாக செய்யவும். ஒரு பந்தை எடுத்து 5'' முட்டை வடிவில் அதை திரட்டி அதன் மீது வெண்ணெய் தடவி, ஏற்கனவே செய்து வைத்துள்ள திணிப்பை, 1 தேக்கரண்டி அளவு நடுவில் வைத்து மாவின் ஒரு பக்கத்தை பிடித்து மறு பக்கம் வைத்து விரல்களால் அமுக்கவும். (சோமாசு மடிப்பது போல்)

பின்னர், வெண்ணெய் தடவிய லோஃப் (loaf) இல் மாவை ஒட்டிய பகுதி மேல்புரம் இருக்குமாறு வைக்கவும்.

இதுபோலவே மிதமுள்ள (பந்துகளாக செய்யதுள்ள) மாவையும் செய்து லோஃப் (loaf) இல் வரிசையாக வைக்கவும். (ஒன்றோடு ஒன்று ஒட்டி இருக்குமாறு)

ஒரு ஈரமான துணியால் லோஃப் (loaf) வை மூடி, சுமார் 45 நிமிடம் வரை வைக்கவும். மாவு மீண்டும் நன்றாக உப்பி வந்தவுடன், ப்ரஷில் பால் தோய்த்து ரொட்டி மேல் நன்கு தடவி 180° c வெப்பநிலையியல் சுமார் 30 முதல் 40 நிமிடங்கள் வரை preheated  அவனில் (oven) பேக் செய்யவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக