செவ்வாய், 1 ஏப்ரல், 2014

பன்னீர் பிஸ்ஸா



முதன் முறையாக, பிஸ்ஸா என்ற சொல் எனக்கு அறிமுகமாகியதே எனது பதின்மவயதின் இறுதியில்தான்.  பிஸ்ஸா சுவைத்தது 22 -23 ஆம் வயதில் என நினைக்கிறேன்


என்னை பொறுத்தவரை பிஸ்ஸா என்பது ரொட்டியின் (மாவு) மீது பாலாடைக்கட்டி (சீஸ்), காய்கறிகள் மற்றும் இறைச்சி சேர்த்து பேக் (bake) செய்யும், இத்தாலிய உணவு. அதாவது, நம்ம ஊர் ஊத்தப்பம் மாதிரி. !

பிஸ்ஸா இத்தாலியர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, உலகம் முழுவதும் பிரபலமாகியது.  எனது மகனுக்கு மிகவும் பிடித்த உணவு வகைகளில் பிஸ்ஸாவும் ஒன்று.


பிஸ்ஸா ஆரோக்கியமற்ற உணவு என்ற பொதுவான கருத்திற்கான காரணம், அதில் அதிகமாக பயன்படுத்தப்படும் மைதா (பிஸ்ஸா பேஸ் செய்ய).  மைதா கோதுமையில் மாவில் இருந்து செய்யப்படுகிறது. எனினும், அதன் தயாரிப்பு முறைகளில், கோதுமையின், அனைத்து சத்துக்களும் நிக்கப்பட்டு (கொழுப்பு சத்து மிக்க/Non Soluble fat) தூய வெள்ளை மாவாகிறது. 


மைதாவிற்கு மாற்றாக (முற்றிலும் அல்ல), கோதுமை மாவு சேர்க்கும் போதும், குறைந்த கொழுப்பு வகை சீஸ் மற்றும் அதிக காய்கறிகள் டாப்பிங் (topping) மூலமாக பிஸ்ஸாவை ஆரோக்கிய உணவாக மாற்ற முடியும்.  இப்பொழுது நாம் செய்யும் பிஸ்ஸாவும் ஆரோக்கியமான ஒன்றாகும்.


தேவையான பொருட்கள்  - பிஸ்ஸா ரொட்டி செய்ய (for Pizza base) : மைதா மாவு (All-purpose flour ) - 1 கப் (கோப்பை) முழு கோதுமை மாவு - 1 முதல் 1½ கப் வரை ;    தண்ணீர் - 1½ கப் ;   சர்க்கரை - அரை தேக்கரண்டி ;   உப்பு 1½ தேக்கரண்டி    ;   ஈஸ்ட் - 1½ தேக்கரண்டி   ;    முட்டை 1 (விருப்பமிருந்தால்) ;   ஆலிவ் எண்ணெய் -1 டீஸ்பூன் . ;   பிஸ்ஸா சாஸ் - 1/4 கப்.


தேவையான பொருட்கள்  - பிஸ்ஸா ரொட்டி மீது தூவ (for Pizza Topping)  :  பிஸ்ஸா சாஸ்  ;  பன்னீர் (இந்திய சீஸ்/ பாலாடைக்கட்டி) சிறிய துண்டுகளாக நறுக்கியது - ¼ கப் ;     நடுத்தர வெங்காயம், தக்காளி, குடை மிளகாய் ஆகியன நீளவாக்கில் நறுக்கியது.   ;        குறைந்த கொழுப்பு (low fat) மொஸெரெல்லா சீஸ், துறுவியது - ¾ கப்   ;   ஆலிவ் எண்ணெய் 1 தேக்கரண்டி ;   உலர் ஒரிகனோ 1/4 தேக்கரண்டி  ;   மிளகாய் (அதிக காரமில்லா) சில்லூகள் (chili flakes)  - 1 தேக்கரண்டி .


செயல் முறை


முதலில் இளஞ்சூடான தண்ணீரில், ஈஸ்ட் மற்றும் சர்க்கரை கலந்து சிறிது நேரம் (நுரைக்கும் வரை) வைக்கவும்.   (நொதித்தல் என்பது உணவு வகைகளோடு பயன்தரும் நுண்ணுயிர்களை சேர்ப்பதாகும். அவை உணவில் உள்ள சத்துக்களை எளிதாக மாற்றி உண்ணுவதற்கு ஏதுவாக்கும். எ-டு : இட்லி மாவு, ரொட்டி, தயிர்.)


பின்னர், மைதா, கோதுமை, உப்பு, ஆலிவ் எண்ணெய், மற்றும் முட்டை, அனைத்தையும் நொதித்துள்ள கலவையுடன் சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும்.


பின், மாவை ஒரு பாத்திரத்தில் வைத்து ஈர துணியால் மூடி வைக்கவும். சுமார் நாற்பது ஐந்து நிமிடங்கள் கழித்து, மாவின் அளவு இருமடங்ககிவிடும்.  
பின்னர், மாவை இரு சம பாதியாக பிரித்து (இரண்டு செய்ய) சற்றே கனமான, வட்ட வடிவிலான (பிஸ்ஸா பேஸ்) தயார் செய்யது கொண்டு, முள் கரண்டி வைத்து (மேல்புறம்) குத்தி விடவும்.


தயாரான பிஸ்ஸா பேஸ் மீது  பீஸ்ஸா சாஸை பரவலாக தேய்த்து, சிறிதளவு மொஸெரெல்லா சீஸ் தூவி, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடை மிளகாய் ஆகிய காய்கறிகள் மற்றும் பன்னீர் ஆகியவற்றை பரவலாக  தூவி விட்டு, மீண்டும் மொஸெரெல்லா சீஸ் தூவி, ஆலிவ் எண்ணெய், உலர் ஒரிகனோ, மிளகாய் சில்லூகள் தூவி ஏற்கனவே சூடாக்கிய ஆவனில் (pre-heated) 220° சி வெப்பத்தில் சுமார் இருபத்தைந்து நிமிடங்கள் அல்லது நன்றாக பிஸ்ஸா பேஸ் வேகும் வரை வைக்கவும். (பேக் (bake) செய்யவும்)


பின், தக்காளி சாஸ் உடன் சூடாக பரிமாறவும்.




பின் குறிப்பு :  இறைச்சி பிரியர்கள், கிறில்ட் சிக்கன் (Grilled Chicken) தூண்டுகள், சூரை (Tuna Chunks) மீன் தூண்டுகள், வேகவைத்த அரைக்கப்பட்ட இறைச்சி (Minced meat) மற்றும் ஸ்மோக்டு சாசெஜ் (smoked Sausage) ஆகியவற்றையும் பிஸ்ஸா பேஸ் தூவி பேக் (bake) செய்யவும்
 
இந்த செயல்முறை உங்களுக்கு வீட்டிலேயே ஆரோக்கியமான பிஸ்ஸா செய்ய பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.  மற்றும், உங்களின் ஆக்கபூர்வமான கருத்துக்களை அறிய விரும்புகிறேன்.

2 கருத்துகள்:

  1. இன்றுதான் தங்களின் தளத்திற்கு முதல் வருகை. சமையல் குறிப்புகள் அனைத்தும் நன்றாக உள்ளது! சமைக்கத் தெரியாவிட்டாலும், படித்து ருசித்துக் கொள்கிறேன்!

    பதிலளிநீக்கு