திங்கள், 7 ஏப்ரல், 2014

முழு (தானிய) கோதுமை ரொட்டி

 
சென்ற பதிவில் மிக எளிதான சாக்லேட் ஃபட்ஜ் செயல்முறைபற்றி பார்தோம். இப்போழுது கோதுமை ரொட்டியை வீட்டிலேயே செய்வதெப்படி என பார்போம்.

பொதுவாக நாம் பேக்கரில் வாங்கும் ரொட்டி, மைதாவினால் செய்யப்பட்ட ஒன்று. கோதுமை மாவு, மைதாமாவைவிட ஆரோக்கியமானது. மைதாவும், கோதுமையில் இருந்தே செய்யப்படுகிறது. பின்னர் எப்படி?

கோதுமையில் இருந்து, மைதாமாவு செய்யும் செயல்முறைகளினால், கோதுமையின் சத்துகள் முழுமையாக நீக்கப்படு வெள்ளை நிறமாவாகிறது.

ஆனால், நாம் முழு கோதுமை மாவு மற்றும் தேன் (சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு மாற்றாக) ஆலிவ் எண்ணெய், கொண்டு செய்வதால, இது ஆரோக்கியமான உணவாகிறது.

தேவையான பொருட்கள் : முழு தானிய கோதுமை மாவு 3 1/2 கப் ; தேன் 40 மில்லி ; ஆலிவ் எண்ணெய் 40 மிலி ; சூடான தண்ணீர் 1 1/2 கப் , 1 டீஸ்பூன் மோலாலஸ். ; 1/2 தேக்கரண்டி கடல் உப்பு , 1 தேக்கரண்டி (வறண்ட) ஈஸ்ட்.

செயல்முறை: முதலில் வெதுவெதுப்பான நீரில் ஈஸ்ட், தேன், மற்றும் மோலாலஸ் சேர்த்து, நொதிக்கவைக்கவும். பிறகு, எண்ணெய் மற்றும் 2 கப் முழு கோதுமை மாவு சேர்த்து நன்றாக கலக்கவும்.

பின் சிறிது சிறிதாக முழு மாவையும் சேர்த்து கலக்கவும். (Kitchen Aid (அ) Blender உபயோகமாக இருக்கும்.) எந்த காரணம் கொண்டும் 3 1/2 கப் மாவிற்கு மேல் சேர்க்க வேண்டாம்.

ரொட்டி மாவு பஞ்சுபோன்ற, ஈரபதமாகவும் இருக்க வேண்டும் (சப்பாத்தி மாவு போல). இல்லையெனில் ரொட்டி தின்மையாக (hard) இருக்கும். தயார் செய்த மாவை ஒரு பாத்திரத்தில் இட்டு, ஈரமான துணியால் சுமார் 45 – 60 நிமிடங்கள் மூடிவைக்கவும்.

சுமார் 45 – 60 நிமிடங்கள் பிறகு மாவின் அளவு இருமடங்காகிவிடும் (நொதித்தல்). பின்னர், மாவை மிருதுவாக கைகளால் பிசைந்து, மாவின் அளவை (நொதித்தல்லுக்கு முன் ) அதன் அசல் அளவிற்கு மாற்றவும்.

பின் மாவை உருளையாக உருட்டி, ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள (Pre Greased) ரொட்டி பேக் செய்யும் பாத்திரத்தில்(bread pan) வைத்து (ரொட்டி மாவு பாத்திரத்தின் விளிம்பின் அளவு பொங்கும் வரை) ஈரமான துணியால் மூடிவைக்கவும்.

பின்னர், ரொட்டி மாவு பாத்திரத்தை ஏற்கனவே சூடாக்கிய அவனில் (preheated oven) 350°C வெப்பநிலையில் சுமார் 30 நிமிடங்கள் வைத்து பேக் செய்யவும் பின், சூடாறியபின், கத்தியால்(shredded knife) தேவையான அளவிற்கு வெட்டி கொள்ளவும்.

உங்கள் விருப்பம் போல், டோஸ்ட், பழகூழ், பாலாடைக்கட்டி, வெண்ணெய் தேய்த்து சாப்பிடலாம்.

கோதுமை ரொட்டி : ஒரு முழுமையான காலை சிற்றுண்டி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக