வியாழன், 24 ஜூலை, 2014

பிரஞ்சு மெக்ரொன்





மெக்ரொன் (Macaron)  பார்பதற்கு பிஸ்கட் போல் இருந்தாலும், இது ஒரு இனிப்பு வகை. இதன் தோற்றம் பிரஞ்சு என்றாலும்,   சுவிஸ் மற்றும் இத்தாலியில் மிகவும் பிரபலமான உணவாக உள்ளது.

மெக்ரொன் செய்ய முக்கிய மூலப்பொருள் முட்டை வெள்ளை (புரதம்) மற்றும் சரியான பக்குவம் / பதம். 

மெக்ரொன் செய்ய தேவையான பொருட்கள் : 100 கிராம் பாதாம் (தோல் நீக்கி தூளாக்கியது) ; 180 கிராம் (ஐசிங்) சர்க்கரை  ; 100 கிராம் பதப்படுத்திய முட்டை வெள்ளை கரு  ;  35 கிராம் சர்க்கரை பொடி  ; விருப்பப்படி உணவு ர்ம் (விருப்பப்படி)

கிரீம் செய்ய தேவையான பொருட்கள் :  ½ கப்  கிரீம்  ; 1/4 நட்டுல்லா (Nutella hazelnut)  சாக்லெட் கிரீம்  ;  ¼ கப் ( 30 கிராம்) டார்க் சாக்லேட் (தூகளாக்கியது)

செயல்முறை  : முட்டையின் வெள்ளை கருவை தனியாக பிரித்து காற்று புக முடியாத கொள்கலனில் அடைத்து சுமார் 48 மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.


பாதாம் தூள் மற்றும் சர்க்கரை பொடியை நன்றாக கலக்கி கொள்ளவும்.

முட்டையின் வெள்ளை கருவை மிக்சர் உதவியுடன் மிதமான வேகத்தில் நன்றாக நுரைப்போன்ற பதம் வரை அடித்துகொள்ளவும். இப்போது படிப்படியாக, சர்க்கரை சேர்த்துகொண்டே  மிதமான வேகத்தில் கம்பிபோல் (கடினமா) மாறும்வரை அடித்துகொள்ளவும்.

இப்போது படிப்படியாக, பாதாம் / சர்க்கரை கலவையை சேர்க்கவும். மீண்டும் மிதமான வேகத்தில் (கடினமா) மாறும்வரை மெக்ரொன் கலவையை அடித்துகொள்ளவும்.

இப்போது ஒரு கேக் பைப்பிங் பையின் (1 செ.மீ. முனை பொருத்தப்பட) உள்பகுதியில் உணவு வண்ணத்தை பயன்படுத்தி பட்டைகள் வரையவும்
பின்னர், மெக்ரொன் கலவையை கேக் பைப்பிங் பையில் அடைத்து, குக்கீ தாள் மீது ஒரே அளவாக வட்ட வடிவில் பைப் செய்து சுமார் 30-60 நிமிடங்கள் அறை வெப்பநிலையில் உலரவிடவும். 

அதன்பின், மெக்ரொனை பிரித்து Preheat செய்யப்பட்ட அடுப்பில் 325 டிகிரி பாரன்ஹீட் (160° C) வெப்பத்தில், சுமார் 7 நிமிடங்கள் வரை வைத்து, மெக்ரொனை திருப்பி வைத்து மீண்டும் 7 நிமிடங்கள் வரை சுட்டுக்கொள்ளவும். தயாரகிய மெக்ரொனை நன்றாக ஆரவைத்து கொள்ளவும்.

(Ganache) கிரீம் நிரப்புதல்: ஒரு பாத்திரத்தில் கிரீமை கொதிக்க வைத்து  நட்டுல்லா (Nutella hazelnut)  சாக்லெட் கிரீம் மற்றும் டார்க் சாக்லேட் சேர்த்து கிரீம் கலவை தயார்.

பின்னர், கிரீமை ஒரு மெக்ரொன் மீது தடவி மற்றொறு மெக்ரொனை வைத்து மெதுவாக அழுத்தவும்.

இந்த பிரஞ்சு மெக்ரொன் மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் என நம்புகிறேன்.

திங்கள், 12 மே, 2014

வேர்க்கடலை-வெண்ணெய் குக்கீகள்




என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் எப்போதும் இந்த வேர்க்கடலை வெண்ணெய் (Peanut Butter)  குக்கீகளை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். எனவே, உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.

வறுத்த ஓட்ஸ், வேர்க்கடலை-வெண்ணெய் மற்றும் பழுப்பு சர்க்கரை முதலியன இந்த குக்கீயின் அலாதியான சுவைக்கு காரணமான பொருட்கள் ஆகும்.

இந்த குக்கீ சுவையானது மட்டுமல்ல, பால் அல்லது பழசாறுடன்  2 - 3 குக்கீ ஒரு முழமையான (காலை) சிற்றுண்டியாகும்.

தேவையான பொருட்கள் பட்டியல்: 100 கிராம் unsalted வெண்ணெய் + சில தேக்கரண்டிகள்.  ;  1 கப் ஓட்ஸ் ; 1 கப் மைதா + தேக்கரண்டிகள்.  ; 1 தேக்கரண்டி பேக்கிங் சோடா  ;  1 தேக்கரண்டி உப்பு ;  1/3 கப் சர்க்கரை ; 1/2 கப் (டார்க்) பழுப்பு சர்க்கரை ;  1/2 கப் வேர்க்கடலையில் இருந்து செய்யபட்ட வெண்ணெய். (Peanut Butter)

செய்முறை :  கடாயில், சுமார் 4 தேக்கரண்டி வெண்ணெயுடன் ஓட்ஸ்-சை சேர்த்து (5 நிமிடங்கள்) வரை வறுக்கவும்.

ஒரு கிண்ணத்தில், மாவு, சமையல் சோடா, உப்பு சேர்த்து கலக்கி கொள்ளவும்.

வெண்ணெய், சர்க்கரை மற்றும் பழுப்பு சர்க்கரை ஆகியவற்றை கலந்து, பின் வை. வேர்க்கடலை-வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து, சிறிது சிறிதாக ஓட்ஸ் மற்றும் மாவு கலவையை சேர்த்து கலக்கி கொள்ளவும்.

பின்னர் மாவை நீள (பாம்பு போன்ற) வடிவில் உருட்டி உறையில் சுற்றி சுமார் 30 நிமிடம் நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.

பின் மாவை, சுமார் 2’’ அகலத்திற்கு வெட்டி பேக்கிங் தட்டில் (பேக்கிங் தாள் இட்டு) பரப்பி சுமார் 180° C preheated  (அடுப்பில்) தங்க பழுப்பு நிறத்தில் மாறும் வரை பேக் செய்யவும். 

சூடாறியபின் காற்றுபுகா கலனில் அடைத்து வைக்கவும்.