திங்கள், 12 மே, 2014

வேர்க்கடலை-வெண்ணெய் குக்கீகள்




என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் எப்போதும் இந்த வேர்க்கடலை வெண்ணெய் (Peanut Butter)  குக்கீகளை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். எனவே, உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.

வறுத்த ஓட்ஸ், வேர்க்கடலை-வெண்ணெய் மற்றும் பழுப்பு சர்க்கரை முதலியன இந்த குக்கீயின் அலாதியான சுவைக்கு காரணமான பொருட்கள் ஆகும்.

இந்த குக்கீ சுவையானது மட்டுமல்ல, பால் அல்லது பழசாறுடன்  2 - 3 குக்கீ ஒரு முழமையான (காலை) சிற்றுண்டியாகும்.

தேவையான பொருட்கள் பட்டியல்: 100 கிராம் unsalted வெண்ணெய் + சில தேக்கரண்டிகள்.  ;  1 கப் ஓட்ஸ் ; 1 கப் மைதா + தேக்கரண்டிகள்.  ; 1 தேக்கரண்டி பேக்கிங் சோடா  ;  1 தேக்கரண்டி உப்பு ;  1/3 கப் சர்க்கரை ; 1/2 கப் (டார்க்) பழுப்பு சர்க்கரை ;  1/2 கப் வேர்க்கடலையில் இருந்து செய்யபட்ட வெண்ணெய். (Peanut Butter)

செய்முறை :  கடாயில், சுமார் 4 தேக்கரண்டி வெண்ணெயுடன் ஓட்ஸ்-சை சேர்த்து (5 நிமிடங்கள்) வரை வறுக்கவும்.

ஒரு கிண்ணத்தில், மாவு, சமையல் சோடா, உப்பு சேர்த்து கலக்கி கொள்ளவும்.

வெண்ணெய், சர்க்கரை மற்றும் பழுப்பு சர்க்கரை ஆகியவற்றை கலந்து, பின் வை. வேர்க்கடலை-வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து, சிறிது சிறிதாக ஓட்ஸ் மற்றும் மாவு கலவையை சேர்த்து கலக்கி கொள்ளவும்.

பின்னர் மாவை நீள (பாம்பு போன்ற) வடிவில் உருட்டி உறையில் சுற்றி சுமார் 30 நிமிடம் நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.

பின் மாவை, சுமார் 2’’ அகலத்திற்கு வெட்டி பேக்கிங் தட்டில் (பேக்கிங் தாள் இட்டு) பரப்பி சுமார் 180° C preheated  (அடுப்பில்) தங்க பழுப்பு நிறத்தில் மாறும் வரை பேக் செய்யவும். 

சூடாறியபின் காற்றுபுகா கலனில் அடைத்து வைக்கவும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக