வியாழன், 1 மே, 2014

பாதாம் சாக்லேட்


ரு சாக்லேட் விசிறியாக இருந்தும், நான் இதுவரை சாக்லேட் (அ) கேண்டி செய்முறையை பதிவே எழுதவேயில்லை. எனவே மிகவும் எளிமையான, சுவையான பாதாம் சாக்லேட்  (பாதாம் மிட்டாய் : மிட்டாய் இந்தி சொல், எனவே பாதாம் இனிப்பு)

பல முறை, எனக்கு சாக்லேட்மிதான ஈர்ப்பை பற்றி குறிப்பிட்டுள்ளேன், சிறு வயது முதலே எனக்கு சாக்லேட் உற்பத்தி செய்யும் இடத்தில் வேலை செய்ய வேண்டும் என ஆசை. ஆனால்……….!. எனவே, நான் என் சமையலறையில் சாக்லேட் செய்ய/உருக்க ஆரம்பித்துவிட்டேன்.

தேவையான பொருட்கள் :  பாதாம் 1 கப் ; 2 டீஸ்பூன் சர்க்கரை ; வெண்ணெய் 2 தேக்கரண்டி ; அரை இனிப்பு (semi sweet) சாக்லேட் 200 கிராம் .
 
செயல் முறை : சுமார் 150° C  (oven) அடுப்பில் பாதாம் பருப்பை 12 நிமிடங்கள் வைத்து (ரோஸ்ட்) பிறகு குளிரவைக்கவும்.

அடிப்பக்கம் தடித்த கடாயில் (குறைந்த வெப்பத்தில்) சர்க்கரை மற்றும் (ரோஸ்ட்) பாதாம் சேர்க்கவும். (சர்க்கரையில் உள்ள நீர் வெப்பத்தால் வெளியாகும் – இதன் பெயர் கேரமலைசெஷன்) சர்க்கரை பழுப்பு நிறமாக மாறும் பொழுது வெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து பேக்கிங் தாள் மீது ஒன்ரோடு ஒன்று ஒட்டாமல் பரப்பவும். 

பின்னர், சாக்லேட் ஃபட்ஜ்-இல் செய்தது போல சாக்லேட்களை (சிறு துண்டுகளாக வெட்டிகொண்டு) அடி பக்கம் கனமான பாத்திரத்தில் இட்டு குறைந்த வெப்பத்தில் வைத்து (சாக்லேட்டை) உருக்கவும். (இரட்டை கொதிகலன் முறை) 

பின் பாதாம் பருப்பை உருகிய சாக்லேட்இல் இட்டு நன்றாக கலந்து (சாக்லேட், பாதாமின் அனைத்து பக்கங்களிலும் ஒட்டுமாறு) பேக்கிங் தாள் மீது ஒன்ரோடு ஒன்று ஒட்டாமல் பரப்பவும். 


சுமார் ஒரு மணிநேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்தால், பாதாம் மிட்டாய் தயார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக