திங்கள், 5 மே, 2014

தேன்-ஓட்ஸ் ரொட்டி






ரொட்டி (BreadBread) செய்து நீண்டநாள் ஆகியதால், மீண்டும் ஒரு ரொட்டி செய்முறையை பதிவு.

எனக்கு பேக்கிங் செய்யவதிலேயே மிகவும் பிடித்தது ரொட்டி பேக்கிங், காரணம் பேக் செய்யும்போது வரும் ரொட்டியின் வாசம்.

இன்று செய்யபோகும் ரொட்டியின் பெயர் தேன்-ஓட்ஸ் ரொட்டி. இது மிகவும் ஆரோக்கியமான, சுவையான, முழுமையான சிற்றுண்டி. தேன்,  உணவாக மட்டும் இன்றி மருந்தாகவும் பயன்படுத்தபடுகிறது.

தேவையான பொருட்கள் :: 1 ¼ கப் கொதிக்கும் நீர் ; 1 கப் ஓட்ஸ் ; 2 டீஸ்பூன் unsalted வெண்ணெய்  ; 1 ½ தேக்கரண்டி கல் உப்பு  ; ¼ கப் தேன்  ;  1 கப் முழு கோதுமை மாவு ;   1-2/3 கப் மைதா ; ¼ கப் பால் பவுடர் ;  2 தேக்கரண்டி ஈஸ்ட்.


செயல்முறை:  ஒரு கிண்ணத்தில் 1 ¼ கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, ஓட்ஸ், வெண்ணெய், உப்பு மற்றும் தேன் சேர்த்து கலக்கி இளஞ்சுடான பதத்தில்,
மீதமுள்ள பொருட்களை (கோதுமை மாவு, மைதா மாவு, பால் பவுடர்), சேர்த்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும். (கையால் அல்லது இயந்திரத்தால்)

சிறிது எண்ணை தடவப்பட்ட கிண்ணத்தில் மாவை வைத்து, ஈரமான துணியால் சுமார் 45 – 60 நிமிடங்கள் மூடிவைக்கவும்.

சுமார் 45 – 60 நிமிடங்கள் பிறகு மாவின் அளவு  இருமடங்காகிவிடும் (நொதித்தல்). பின்னர், மாவை மிருதுவாக கைகளால் பிசைந்து, மாவின் அளவை (நொதித்தல்லுக்கு முன் ) அதன் அசல் அளவிற்கு மாற்றவும்.

பின் மாவை உருளையாக உருட்டி, ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள (Pre Greased) ரொட்டி பேக் செய்யும் பாத்திரத்தில்(bread pan) வைத்து (ரொட்டி மாவு பாத்திரத்தின் விளிம்பின் அளவு பொங்கும் வரை) ஈரமான துணியால் மூடிவைக்கவும்.

பின்னர், மேல் பரப்பில் ஓட்ஸ் தூவி பின்னர், ரொட்டி மாவு பாத்திரத்தை ஏற்கனவே சூடாக்கிய அவனில் (preheated oven) 350°C வெப்பநிலையில் சுமார் 30 நிமிடங்கள் வைத்து பேக் செய்யவும் பின், சூடாறியபின், கத்தியால் (shredded knife) தேவையான அளவிற்கு வெட்டி கொள்ளவும்.


உங்கள் விருப்பம் போல், டோஸ்ட், பழகூழ், பாலாடைக்கட்டி, வெண்ணெய் தேய்த்து சாப்பிடலாம்.

2 கருத்துகள்:

  1. எல்லா பேக்கிங் வகைகளும் ரொம்ப அருமையாக விளக்கி இருக்கீங்க ஆனால் ஸ்டெப் பை ஸ்டெப் படம் போட்டால் நல்ல இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்திற்கு நன்றி. எதிர்காலத்தில் கண்டிப்பாக பரிசிலிக்கபடும்.

      நீக்கு