செவ்வாய், 22 ஏப்ரல், 2014

சாக்லேட் குக்கீஸ்




இன்று நாம் குக்கீஸ் (அமெரிக்காவில் குக்கீஸ், ஐரோப்பாவில் பிஸ்க்யுட், நம்ம ஊர்ல பிஸ்கெட்!) செய்யலாமா ?

இந்த செயல்முறை, மார்தா ஸ்டூவர்ட்-இன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து....................  

வழக்கம் போல் நான் டார்க் சாக்லேட் உபயோகிறேன். (அரை இனிப்பு சாக்லேட்டும் உபயோகிக்கலாம்).  இந்த குக்கீஸ் மேற்புரம் மற்ற குக்கீஸ் போல் இல்லாமல் இருப்பது இதன் சிறப்பு.

தேவையான பொருட்கள் :  (சிறு துண்டுகளாக நறுக்கப்பட்ட) டார்க் / பிட்டர் (Bitter) ஸ்வீட் சாக்லேட் 60 கிராம்     ; மைதா மாவு 1 கப் (125 கிராம்)   ;  1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்  ; 1/4 கப் (30 கிராம்) Unsweetened  இனிப்பில்லா கொக்கோ தூள்  ; 1 கப் (200 கிராம்) சர்க்கரை   ; 2 பெரிய முட்டை ; 4 தேக்கரண்டி (உருகிய) Unsalted  உப்பில்லா வெண்ணெய்   ;   3/4 தேக்கரண்டி தூய வெண்ணிலா சாறு ; 1/2 கப் (110 கிராம் ) Confectioners ' சர்க்கரை பவுடர் (பொடி)

செயல் முறை :  சாக்லேட் ஃபட்ஜ்-இல் செய்தது போல சாக்லேட்களை (சிறு துண்டுகளாக வெட்டிகொண்டு) அடி பக்கம் கனமான பாத்திரத்தில் இட்டு குறைந்த வெப்பத்தில் வைத்து (சாக்லேட்டை) உருக்கவும்.

ஒரு கிண்ணத்தில் மாவு, பேக்கிங் பவுடர், மற்றும் கொக்கோ ஒன்றாக சேர்த்து கலக்கிகொள்ளவும்.

மற்றொரு கிண்ணத்தில்,  சர்க்கரை, முட்டை, உருகிய வெண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலக்கிகொண்டு,  படிப்படியாக உருகிய சாக்லேட் மற்றும் வெண்ணிலா சாறை சேர்க்கவும். பின்னர், சிறிது சிறிதாக மாவு கலவையை சேர்த்து கிளறவும். பின், கலவையை சுமார் முன்று மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.

பின்னர், ஒரு தேக்கரண்டி அளவு மாவு கலவையை, சிறிய பந்து வடிவில் உருட்டி, சர்க்கரை (பவுடர்) பொடியில் உருட்டி எடுத்து பேக்கிங் தாள் பரப்பிய பேக்கிங் தட்டில் வைக்கவும். இப்படியே மிதமுள்ள மாவு கலவையிலும் செய்து, சுமார் 325 டிகிரி Preheat  செய்த அடுப்பில் வைத்து 15 நிமிடங்கள் பேக் (Bake) செய்யவும்.

சூடாறியபின் காற்றுபுகா கலனில் அடைத்து வைக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக